வாகை சூடடா

வாகை சூடடா
06 / 04 / 2025

எது வந்த போதும்
எதிர்த்து நில்லடா
சூது வாது கபடம்
மிதித்து செல்லடா
மாது மது இரண்டையும்
விலக்கி வையடா
புது பாதை போட்டு
நடையை கட்டடா
நெஞ்சை நிமிர்த்தி வாழ்வில்
நிலைத்து நில்லடா
கூழை கும்பிடு போடும்
நிலையை மாற்றடா
உண்மை நேர்மை இரண்டையும்
கண்ணாய் போற்றடா
திறமை உனக்குள் இருக்கு
சிறகை விரியடா
வானும் மண்ணும் உன்கையில்
வாகை சூடடா

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (3-Nov-25, 7:44 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 34

மேலே