பேரு என்ன பேரு
ஏனுங்க பசங்க பொறந்து நாலு நாள்
ஆகுது. இன்னும் அவுங்களுக்குப் பேரு
வைக்காம இருக்கிறமே?
@@@@@@@
நம்ம குடும்ப சோசியர் பொய்லேஷ்கிட்ட
கேட்டேன். இரட்டைப் பசங்களோட இராசி
நல்ல இராசியாம். பேரு மட்டும் ஒரே
மாதிரி பேரா வைக்கணுமாம்.
அவுங்களுக்கு நாம வைக்கிற
பேருங்களோட முதல் எழுத்து மட்டும்
வெவ்வேறு எழுக்களா இருக்கணுமாம்.
@@@@@@@
(அந்த நேரத்தில் பெண்ணின் தாய் மாமன்
வருகிறார்):
வாங்க மாமா. நல்லா இருக்கிறீங்களா?
@@@@@@
நல்லா இருக்கிறேம்மா நகேஷ்வரி. நான்
வர்றபோது நீயும் எம் பையனும் எதோ
பேருன்னு பேசிட்டிருந்தீங்களே எம்
பேரனுக்கு பேரைப் பத்தியா பேசிட்டு
இருந்தீங்க?
@@@@@
ஆமாம் மாமா. பசங்களுக்கு வைக்கிற
இந்திப் பேருங்களோட முதல் எழுத்து
மட்டும் வித்தியாசமா இருக்கணுமாம்.
@@@@@@
இது தான் உங்க பிரச்சனையா? பேரு
என்னம்மா பேரு? நான் சொல்லறேன்.
கமாரா (ஹமாரா) - துமாரா. வைங்கம்மா
சோசியர் சொன்ன மாதிரி பேருங்களின்
முதல் எழுத்து மட்டும் வித்தியாசமா
இருக்குது பாத்தியா?
@@@@@@@@
ஆமாங்க மாமா. ஹமாரா - துமாரா
அருமையான பேருங்க மாமா.
@@@@@@@
ஹமாரா - ஸ்வீட் நேம்ஸ் அப்பா.

