நல்ல துறல்வேண்டும் பெண்கள் - ஆசாரக் கோவை 46

பஃறொடை இன்னிசை வெண்பா

காட்டுக் களைந்து, கலம்கழீஇ, இல்லத்தை
ஆப்பி,நீர் எங்கும் தெளித்து, சிறுகாலை,
நீர்ச்சால், கரகம், நிறைய மலரணிந்(து),
இல்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க-
நல்ல(து) உறல்வேண்டு வார்! 46

- ஆசாரக் கோவை

பொருளுரை:

நல்ல செல்வமும், நன்மையும் அடைய விரும்பும் பெண்கள் அதிகாலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்து,

வீடு அழகுற விளங்கும்படி செத்தைகளைப் போக்கி, முதல் நாள் உபயோகித்த பாத்திரங்களைக் கழுவி,

பசுவின் சாணத்தாலே தம் இல்லத்தில் எங்கும் தெளித்து, நீர் நிறைக்கும் வாளி, பானைகளும் நிறைத்து,

தலையில் மலர் அணிந்து அடுப்பினுள் நெருப்பு வைத்து உணவு சமைக்க வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Nov-25, 4:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே