என்னடா மூஞ்சியெல்லாம் வீங்கிருக்குது
என்னடா பேரா மூஞ்சியெல்லாம் வீங்கிருக்குது?
உன்னைப் பார்து இரண்டு மாசம் ஆகுது. ஏதாவது சேராத
பொருளைத் தின்னு அழற்சி வந்து மூஞ்சி வீங்கிருக்குதா?
@@@@@@@@@@@
பாட்டி சின்ன வயசிலிருந்தே நான் நிறையப் போய் பேசி
உங்ககிட்ட செம்மையா அடி வாங்கியதை இப்பவும் நான்
மறக்கல.
@@@@@@@@@@
ஏன் மூஞ்சி வீங்கிச்சுன்னு அதுக்குப் பதில் சொல்லுடா?
@@@@@@@@
பாட்டி மாநில அளவில அதிகமாப் பொய் பேசறவங்களுக்கு
ஒரு போட்டியை ஒரு கட்சி நடத்துச்சு. அதில கலந்துட்டு நான்
முதல் பரிசு வாங்கினேன். பத்தாயிரம் பரிசுத் தொகை. அதோட
அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வேலை கெடச்சது.
இரண்டு மாதம் பயிற்சி. தங்குமிடம் இலவசம் (குளிர்சாதன
அறை) மூணு வேளையும் கொழுத்த
உணவு பொருள்களைப் பரிமாறினாங்க. பயிற்சி முடிஞ்ச நாளில்
இருந்து தினமும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி விவாத்துக்கு
புள்ளி விவரமெல்லாம் கொடுத்து அனுப்பறாங்க. ஒரு நாளைக்கு
எனக்கு பத்தாயிரம் ரூபாய் வருமானம். காலை மாலை மட்டும்
தான் வீட்டில சாப்பிடறேன். மதியம் இரவு எனக்குப் பிடிச்ச
அசைவ உணவைச் சாப்பிடறேன். என் மூஞ்சில வீக்கம் இல்லை.
அசைவ உணவால் முகம் உப்பியிருக்கிறது
@@@@@@@
அடேயப்பா பேரா அடிக்கடி மருத்துவ பரிசோதனை
பண்ணிக்கடா.
@@@@@@@@@
பாட்டி, எங்க கட்சியின் தலைமை நிலையத்துப் பக்கத்திலேயே
ஒரு பரிசோதனைக்கூடம் இருக்குது. எல்லாம் எங்க கட்சி
பாத்துக்கும். பயப்படாதீங்க பாட்டி. எங்க கட்சி
அலுவலகத்திலேயே சோதிடத்தில் முனைவர் பட்டம் (PhD)
வாங்கின பிரபல சோதிடர் 'வார்ஸ்வொர்த்' -னு (Wordsworth) ஒரு
சோதிடர் இருக்கிறார். என்னுடைய ஆயுள் 90-ன்னு
சொல்லிட்டாரு.
பயப்படாதீங்க பாட்டி. எனக்கு மாரடைப்பு எல்லாம் வராது.
@@@@@@@@@@@
சரிடா பேரா. நீ சீக்கிரம் திருமணம் பண்ணீட்டு மகிச்சியா
இருந்து நான் கொஞ்சப் பேரன், பேத்தியைக் கொடுடா பேரா.

