என்னடா படிச்சவங்க உங்க கட்சில

டேய் தக்லேஷு என்னடா போன மாசம்

தொடங்கப்பட்ட உங்க கட்சில படிச்சவங்க

கூட சேர்ந்திருக்கிறாங்க?

@@@@@@@

வேற கட்சிகள்ல சேர வாய்ப்பில்லாதவங்க

எங்க கட்சியை நோக்கி ஓடி வர்றாங்க?

@@@@@@

எதுக்குடா?

@@@@@@

எதாவது தொகுதில நிற்க வாய்ப்புக்

கிடைக்கும். வர்றவங்க எல்லாம்

பன்னிரண்டாம் வகுப்பில் குறந்ச

மதிப்பெண் பெற்று தனியார்


கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில்

நிறையப் பணம் கட்டி உருண்டு புரண்டு

பட்டம் வாங்கின்வங்க. தேர்தலில் நின்னாச்

செலவை எல்லாம் அவுங்களே செய்வாங்க.

அதுக்குச் பல இலட்சங்களைக்

கொடுப்பாங்க. கட்சி ஜெயிச்சு ஆட்சிக்கு

வந்தா பதவிகளையும் விலை கொடுத்து

வாங்கிடுவாங்க. இது தான் எங்க

கட்சியோட நிலைமை. நானே வட்டச்

செயலாளர் பதவிக்கு இருபது இலட்சம்

கொடுத்தேன்.

@@@@@@

எங்கிட்டப் பணம் இல்லப்பா..இலஞ்சம்

வாங்காத கட்சி இருந்தா அதில சேர்ந்து

அடிப்படை உறுப்பினரா இருந்து

மக்களுக்குத் தொண்டாற்றப் போறண்டா.

எழுதியவர் : மலர் (5-Nov-25, 8:16 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 14

மேலே