கொடை அறமும் விருந்தினர்க்கு உணவும் - ஆசாரக் கோவை 48

இன்னிசை சிந்தியல் வெண்பா

கலியாணந் தேவர் பிதிர்விழா வேள்வியென்
றைவகை நாளும் இகழா தறஞ்செய்க
பெய்க விருந்திற்குங் கூழ். 48

- ஆசாரக் கோவை

பொருளுரை:

தான் செய்யும் கலியாண நாள்,

கடவுளர்க்கு உகந்த சிறப்பு நாள்,

பிதிரர்களுக்குச் சிறப்புச் செய்யும் நாள்,

பிற விழா நாள்,

வேள்வி செய்யும் நாள்

என்ற ஐந்து வகையான நாட்களிலும் இகழாது கொடை அறம் செய்யவும், விருந்தினர்க்கு உணவிடவும் வேண்டும்.

தேவர் நாள் - தெய்வத்திற்குச் செய்யப்படும் திருவிழா நாள்.
பிதிர்கள் - இறந்துபோன பெரியோர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Nov-25, 12:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

சிறந்த கட்டுரைகள்

மேலே