இன்னிசை இருநூறு 28 - மூன்றாவது அதிகாரம் – இல்வாழ்க்கை 8

இன்னிசை இருநூறு 28 - மூன்றாவது அதிகாரம் – இல்வாழ்க்கை 8
இன்னிசை வெண்பா

உடையானை உள்ளத்(து) உடையானொன் றானும்
உடையான் பசிகுளிர்கண்(டு) உள்ளத்(து) உடையான்
உடையானூண் ஆற்றான் உறுவதுடை யான்அன்(பு)
உடையான் உடையான் உயிர். 28

- இன்னிசை இருநூறு

பொருளுரை:

இறைவனை உள்ளத்தில் சிந்திக்கும் ஒருவன் ஒருவகையானும் அழியான் பிற உயிரின் பசியையும் குளிரையும் கண்டு அவ்வுயிர் தன்னை நினையுமாறு அத்துன்பத்தை நீக்காதவன் உடையாலும், ஊணாலும் தான் பின்னர் எய்தும் துன்பத்தை நீக்காதவனாவான், ஆதலால், அன்புடையானே உயிருடையா னாவான் என்றவாறு!

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (8-Nov-25, 1:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

சிறந்த கட்டுரைகள்

மேலே