ஏக்கங்கள்

வாழ்வின் அடித்தட்டில்
வாழுகின்ற மக்கள்
ஏழ்மையுடன்
போராடி ஏக்கத்துடன்
வாழ்கின்றார்கள்
இந்த ஏக்கத்தில்
ஓர் அர்த்தமுள்ளது

வாழ்வின் மேல்தட்டில்
வாழுகின்ற மக்களும்
ஏக்கத்துடன்தான்
வாழ்கின்றார்கள்
எந்த வகையில் இதனை
அர்த்தம் கொள்வது?

மனித வாழ்க்கை என்னும்
தராசு தட்டில்
ஏற்ற இறக்கத்துடன் ஏக்கங்கள்
ஒரு அங்கமாக இருப்பதை
தவிர்க்க இயலாது போலும்...!!
-- கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (9-Nov-25, 6:41 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : EEKKANGAL
பார்வை : 106

மேலே