பொன்னா லிழைத்த சிறை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கற்றல் பலதுறையாம் காதல் திருமணமாம்
மற்றும் பலவாக மாறாத – நற்பிணைப்(பு)
இன்பமுறு நல்லதொரு இல்வாழ்க்கை என்றுமிது
பொன்னா லிழைத்த சிறை!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Nov-25, 8:17 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே