அருவி

மலையில் இருந்து
துள்ளிக்குதித்து ஓடி வரும் அருவி
பூமியைத் தொட்டவுடன்
மெல்ல மெல்ல தவழ்ந்து
சிறு குழந்தையைப் போல் நடை பழகி
கன்னிப்பெண் போல்
அங்குமிங்கும் சிட்டாக ஓடி
கடலில் சங்கமம் கொண்டதும்
குடும்பப்பெண் போல் அமைதியாகிவிடுகிறது...!!
-- கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (9-Nov-25, 9:41 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : aruvi
பார்வை : 93

மேலே