இன்னிசை இருநூறு 29 - மூன்றாவது அதிகாரம் – இல்வாழ்க்கை 9

இன்னிசை இருநூறு 29 - மூன்றாவது அதிகாரம் – இல்வாழ்க்கை 9
இன்னிசை வெண்பா

இன்ன லுறாமேபே ரின்பந் தருநெறி
உன்னின் உளதால் உஞற்றல் அரிதன்றால்
எந்நல மேனும் இழப்பிலஃ(து) எவ்வுயிருந்
தன்னுயிர்போற் காணுறூஞ் சால்பு! 29

- இன்னிசை இருநூறு

இழப்பு இல் – இழத்தலில்லை, அஃது – இன்பந் தரும் அந்நெறி

இன்னல் யாதும் உறாமல் பேரின்பத்தை எளிதில் பெறுவதற்கு உரியவழி எவ்வுயிரையும் தன்னுயிர் போல எண்ணி ஒழுகுவதே ஆகும்.

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (10-Nov-25, 3:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே