இன்னிசை இருநூறு 30 - மூன்றாவது அதிகாரம் – இல்வாழ்க்கை 10
இன்னிசை இருநூறு 30 - மூன்றாவது அதிகாரம் – இல்வாழ்க்கை 10
இன்னிசை வெண்பா
பாத்தூ ணறிந்து பகைவெல்ல னீராடல்
நீத்தறுயில் காலை பிறனில் நினையாமை
சீர்த்த முயற்சியிவை காக்கையினைச் சிற்றெறும்பைப்
பார்த்துங்கொள் ளாமை பழி! 30
- இன்னிசை இருநூறு
அறிந்து – காலம் இடம் முதலியன அறிந்து, காலை நீராடல் காலை துயில் நீத்தல் எனக் கூட்டுக, பிறனில் நினையாமை – பிறன் மனை விழையாமை, இவ்வைந்தும் காக்கைக்கு இயற்கை,
சீர்த்த முயற்சி எறும்பின் இயற்கை.

