கார் முகிலே
களைந்தாளே நீல ஆடையை வானநங்கை
அணிந்தாளே கார்முகில் துகிலை வண்ணமங்கை..
கார்முகில் கதிரவனை முற்றிலுமாய் மறைத்திடுமே..
சூடு தணிந்து காற்றும் வாடையாய் படர்ந்திடுமே!
கதிரவன் மறைய புவியும் இருளும்..
இரவோ என்று புள்ளினம் மருளும்..
கீச்! கீச்! என் கூச்சலிட்டு தன் நலம் கூறும்!
கதிரவன் தோன்றிட வானிடம் கோறும்!
கதிரவனை காண பூமியும் ஏங்கும்..
காற்றை தூதாக்கி தேடுமே
எங்கும்!
பூமியின் காதலுக்கு முகிலும் கரையுமே..
வான்மழை அட்சதை தூவியே மறையுமே!
முகிலே! முகிலே! கார் வண்ண முகிலே..
மழையால் மறைந்ததோ உன் தேகத்துகிலே!
விரைந்து வருவாய் மீண்டும் ஆதவனே..
ஆசையுடன் அணைப்பாய் பூமியை காதலனே!

