கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும் - முத்தொள்ளாயிரம் 69
நேரிசை வெண்பா
கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவங்கொலோ! - கூர்நுனைவேல்
வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற்
கொண்டிருக்கப் பெற்ற குணம்! 69
- முத்தொள்ளாயிரம்
பொருளுரை:
கரிய நல்ல நீலமலர் மணக்கும் குளத்தில் நாள்தோறும் பூத்துநின்று தவம் செய்தது! அந்தத் தவத்தின் பயனால் போலும் வழுதி கழுத்தில் மாலை ஆகும் பேறு பெற்றுள்ளது.
கூர்மையான நுனியை உடைய வேல் போன்ற வாயைக் கொண்டிருக்கும் வண்டு சிரிப்பொலி கேட்க மொய்க்கும் பூமாலை, வழுதி மாலை.

