தாவணியை நான் அணிஞ்சி

பெண் : தாவணியை நான் அணிஞ்சி
தலை பின்னி பூ முடிச்சி
மாமனத்தான் பாக்கப்போறேன்
சாயங்காலமா

வேண்டாத தெய்வங்களை
வேண்டிநின்னு வரங்கேட்டு
உன்கூட வாழப்போறேன்
ஜென்மங்களா

எந்த மம்முத ராசனுமே
மாமன்கிட்ட தொண்டுகள் செஞ்சிடனும்
மாமன்னன் ஷாஜகானுமே
மாமன்முன்னே கைகட்டி நின்னிடனும்

நான் பூவாகி காயாகி
மாமன் கையில் கனியாகனும்




ஆண் : தாவணியை நீ அணிஞ்சி
தலை பின்னி பூ முடிச்சி
மாமனை பாக்கவந்த
பொற்குடமா

வேண்டாத தெய்வங்களை
வேண்டிநின்னு வரங்கேட்டு
உன்கூட வாழப்போறேன்
ஜென்மங்களா

சரணம் 1 :

ஆண் : உன் மொகத்த பார்த்திருந்தேன்
உனக்காக வாழ்ந்திருந்தேன்
உன்னோடுதான் - கண்ணே
உன்னோடுதான்
பெண் : நான் கூட சமஞ்சிருந்தேன்
நாளெல்லாம் கனவு கண்டேன்
உனைச்சேரத்தான் - மாமா
உனைச்சேரத்தான்

ஆண் : இதென்ன பொழப்பு
போடுறேன் வழக்கு
வாதிடலாமோ?

பெண் : அத்தையின் மகனே
அழகிய சிவனே
அலைந்திடலாமோ?
ஆண் : எப்பத்தான் நாம
இங்கு அணைக்கிறது?
பெண் : கொஞ்சம் பொறு
கொஞ்ச இன்னும் நாளிருக்கு

பெண் : தாவணியை நான் அணிஞ்சி
தலை பின்னி பூ முடிச்சி
மாமனத்தான் பாக்கப்போறேன்
சாயங்காலமா
ஆண் : வேண்டாத தெய்வங்களை
வேண்டிநின்னு வரங்கேட்டு
உன்கூட வாழப்போறேன்
ஜென்மங்களா

சரணம் 2 :

ஆண் : ஊர் என்ன சொன்னாலும்
நான் நம்ப போறதில்லை
உன்னை நம்பித்தான் - கண்ணே
உன்னை நம்பித்தான்
பெண் : நான் என்ன சொல்லுறது
என் வாழ்வும் இனி
உன்னோடுதான் - மாமா
உன்னோடுதான்
ஆண் : நம்பி வந்த நீ
இனி தள்ளி போகலாமா?
பெண் : தாலி ஒன்னை கட்டிவிடு
வாழ்ந்திடலாமே!
ஆண் : தொட்டு விட்டால் என்னத்தான்
உண்டாகும்
பெண் : பட்டு விட்டால் மேனியெங்கும்
புண்ணாகும்



பெண் : தாவணியை நான் அணிஞ்சி
தலை பின்னி பூ முடிச்சி
மாமனத்தான் பாக்கப்போறேன்
சாயங்காலமா
ஆண் : வேண்டாத தெய்வங்களை
வேண்டிநின்னு வரங்கேட்டு
உன்கூட வாழப்போறேன்
ஜென்மங்களா
பெண் : எந்த மம்முத ராசனுமே
மாமன்கிட்ட தொண்டுகள் செஞ்சிடனும்
ஆண் : இந்த ஷாஜகானும் உனக்கு
ஒரு தாஜ்மகால் கட்டிடனும்.

( தூதுவளை இலை அரைச்சி...என்ற திரை மெட்டுக்கு
எனது வரிகள்..)

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (13-Nov-25, 6:32 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 47

மேலே