ஹைக்கூ

1. புவி ஈர்ப்பை விட
நம் ஈர்ப்பே வலியது..
என காதலுடன் தொங்கிக் கொண்டிருக்கும்
புல் நுனியில் பனித்துளி!
2. நீ பேசும் வார்த்தைகளின்
இடைவெளியில்..
வாழ்கிறது
என் ஏக்கங்கள்..
3.மறந்து போன நினைவுகளும்..
மறைந்து போன காலங்களும்..
களவாடியதோ..
என்னுள் தோன்றி எழுத நினைத்த
என் கவிதைளை!
4.காரிருள் வானில்
சிதறிக்கிடந்தது விண்மீன்
அந்த ரத்து மல்லிகையாய்!
தங்கப் பேரழகி
நிலவு தன்னை
சூடிக் கொள்வாள் என்று!
5. அதெப்படி?
பரிசுத்தமான பனித்துளியால்
ஆன மூடுபனி மட்டும் களங்கமாய்..
அனைத்தையும் மறைக்கிறதே..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (14-Nov-25, 9:57 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : haikkoo
பார்வை : 18

மேலே