இனியும் என்ன இருக்கு நாம் வருத்தம் கொள்ள

என்ன என்னவோ எண்ணியா பிறந்தேன்!
முளையிலே விதைத்தவை விருட்சமாக
என்ன என்ன சாதித்தேன், திரும்பிப்பார்க்கையில்
ஏதுமில்லை, வெறுமை மட்டும் என்னை
ஆட்கொள்ள எங்காவது ஓடிவிடலாமா? என்கிற
எண்ணம் பிறக்க இனியும் என்ன இருக்கு
நாம் வருத்தம் கொள்ள.

கொள்ளையிலே போன காலம் வெள்ளை முடியிலே
தீர்ந்தது கண்டு என் சொல்வேன் நான்,
பற்களுதிர சொல்லுறுதி போனது, சொந்தமும் நிலைக்கலே
நாலு காசு சேர்க்கல, நயவஞ்சகமாக
பிழைக்கல, பிழைத்தது எல்லாம் பிழைதானே, மீன்கள்
இழந்து வாடிய கொக்கு போலே என் வாழ்வும்
முடிவுரை எழுதுகையிலே இனியும் என்ன இருக்கு
நாம் வருத்தம் கொள்ள.

பயந்து பதறிய போது ஆறுதல் சொல்ல, நான் இருக்கேன்
என்று சொல்ல எவரும் இல்லாத சம்பாத்தியம்
என்னுடையது என்ன சொல்ல, மனதில் உறுதியும் உடலில்
வலுவும் உள்ளவரை தெரியவில்லை என்ன
செய்து கொண்டு இருக்கிறோம் என்று, வழிகாட்ட யாருமில்லை
பட்ட அவமானங்கள் பாடமாகவில்லே, கண்
கெட்டபின்னே சூரிய நமஸ்காரம், உதாரணமாக நானே
ஆனேன் உங்களுக்கு எல்லாம், இனியும் என்ன இருக்கு
நாம் வருத்தம் கொள்ள.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-Nov-25, 2:12 am)
பார்வை : 5

மேலே