சுகமானது
சுகமானது...!
16 / 11 / 2025
உன் இளமையும் என் இளமையும்
சேர்ந்தபின்தான்
இளமொட்டு கருவானது.
உன் கரமும் என் கரமும்
இணைந்தபோதுதான்
இருகுடும்பமும் உறவானது.
உன் விழியும் என் விழியும்
கலந்தபோதுதான்
உயர்காவியங்கள் உருவானது.
உன் கால்களும் என் கால்களும்
ஒருங்கிணைந்த போதுதான்
வாழ்வின் பயணம் சுகமானது.

