செம்மாதுளைச் சிரிப்பு செம்மாங்கனிக் கன்னம்
தெம்மாங்கு பாடித் திரிந்திடும் தென்றலே
எம்மாம னின்மவள் எங்குபோய் நிக்காளோ
செம்மா துளைச்சிரிப்பு செம்மாங் கனிக்கன்னம்
கம்மலை காதிலே தொங்கவிட்ட கட்டழகி
எம்மானை நீபோயி எப்படியோ கூட்டிவா
சும்மாநீ சுத்தாதே போ

