பொன்னிறத்தாள் புன்னகையாள் நீயும் பூக்களை முத்தமிட இன்னிசை நேரிசை வெண்பா
தென்றல் தழுவிநறுந் தேன்மலரை முத்தமிட
நன்றி நவின்றன நந்தவன நற்பூக்கள்
புன்னகை யாள்நீயும் பூக்களை முத்தமிட
என்னென்று சொல்வேன் எழில்
தென்றல் தழுவிநறுந் தேன்மலரை முத்தமிட
நன்றி நவின்றன நந்தவனம் -- பொன்னிறத்தாள்
புன்னகை யாள்நீயும் பூக்களை முத்தமிட
என்னென்று சொல்வேன் எழில்

