என்னாசை சொன்னே னினிது - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

காதலென்று சொன்னாற் களிப்பு மிகுந்தானே
ஓதுந் தமிழினி லுன்னதமாய் – நாதமெனச்
சொன்னாரே காதலுக்குச் சொந்தமென்றே கண்களை;
என்னாசை சொன்னே னினிது!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Dec-25, 12:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே