ஆதிபுரீஸ்வரா நமக

ஆதிபுரீஸ்வரா
ஓம் ஆதிபுரீஸ்வரா

உன்னை காண வரோம்
நாங்க உன்னை காண வரோம்

திருவொற்றியூறில்
தோன்றிய சிவனே
புற்றிடம்கொண்டானே

கார்த்திகை மாதம்
பௌர்ணமியில் இருந்து மூன்று நாள்
கவசம் களைந்து
உன்னை கண்டு
புணுகால் அபிஷேகம்
தைல அபிஷேகம்
முப்பத்தி முக்கோடி
தேவர்களும் காண
காத்திருக்கும் அபிஷேகம்

காண வாருங்கள்
கண்டு மகிழுங்கள்
ஆதி புரீஸ்வரா நமஹ
திருவொற்றியூர் ஆண்டவா நமஹ
தியாகராஜ ஸ்வாமி நமஹ

என் பாக்கியம்
அழைத்தாய்
அறிய வைத்தாய்
பட்டினத்தாரின் பாக்கிய பூமி
அவரின் பக்தி
அடைந்த முக்தி
தியாகராஜ ஸ்வாமி

உன் ஆலயம் வந்து
உன்னை கண்டு
ஓடும் தியாகேசா

விநாயகர் கண்டு
சுப்பிரமணியர் கண்டு
குழந்தையேசர் சன்னதி கண்டு

ஓடி வந்தேன்
ஓடும் தியகீஷா உன்னை கண்டேன்
பரவசம் கொண்டேன்
திரும்ப திரும்ப காண்டேன்

திரும்பி வந்து
ஆச்சர்யம் கொண்டேன்
அதிசயமான உன்னை கண்டேன்
ஆதிபுரீஸ்வரா
கவசத்தில் கண்டேன்
செவ்வக பேட்டியின் நடுவே
லிங்க வடிவில் நீ
உன் முழு உருவாய் காண
வருடத்தில் மூன்று நாள்
கார்த்திகை பௌர்ணமி தொட்டு
மூன்று நாள்
உன்னை காண வேண்டும் என்றும்
வேண்டி நின்றேன்
திருநீறு பெற்று
பிரகாரம் சுற்றி
நாயன்மார்கள் ஆசி பெற்று

ஆடல் அரசே நடராஜா
உன் சன்னதி வந்தேன்
எனக்கு முன் நீ அர்ச்சகர் அனுப்பி
கதவை திறந்து
விளக்கு ஏற்றி
தீப ஆராதனையில்
உன் பொற் பாதம் கண்டேன்
மாணிக்கவாசகரும் அருகில்
உள்ளது உணர்ந்தேன்
அழகு நடராஜா உன்னை தரிசித்து

ஆலயம் சுற்றி வர
இருபத்தி ஏழு நட்சத்திர லிங்கம் கண்டேன்
அதிசயமும் ஆனந்தமும் கொண்டேன்
ஒன்றொன்றாக பலஉருவுள்
உன்னை கண்டேன்

மேலும் நகர
எத்தனை ரூபம்
இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கு
தனி தனி லிங்கம்
நக்சத்திர லிங்கம்
நாகலிங்கம்
ஆகாச லிங்கம்
சகஸ்ரலிங்கம்
ஜம்பு லிங்கம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர்
அருணாச்சலேஸ்வரர்
அமிர்தகடேஸ்வரர்
குழந்தை ஈஸ்வரர்
நந்தவனேஸ்வரர்
ராமநாத ஸ்வாமி
ஒற்றீஸ்வரர்
ஜகந்நாதர்
கால பைரவர்
ஜெகதாம்பிகை
பர்வதவர்த்தினி
நவக்கிரங்கள்
பட்டினத்தார்

அனைவரின் அருளுடன்
கடந்து வர

திருவொற்றியேஸ்வரர் சன்னதி
திரையிட்ட சன்னதி
சன்னதி முன் நின்று
சிவ புராணம் கூறி
கண் நிரம்ப
மனம் குளிர
நெகிலவைத்த காட்சி

திருவொற்றியேஸ்வரா
உன் அலங்கார காட்சி
உறைந்தேன்
உணர்ந்தேன்
உண்மை
உருவும்
அறிவும்
அர்த்தமும்
நீ

ஆச்சர்யமே
அழகே

ஆன்மீக பயணமாய் நடக்க

வடிவுடை அம்மன் சன்னதி
அலங்காரம் முடித்து
அழகாய் காட்சியளித்த அம்மா
வடிவுடை நாயகி அம்மா

கர்மா வினைகளை அளித்து
கலங்கிய மனதை ஒளித்து

பொற் பாதத்தில் சேர்த்துக்கொள்
இறைவா
முழுமுதற்கடவுளே

திருவொற்றியூர் தியாகராஜஸ்வாமி நமக
திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரா நமக
வடிவுடை நாயகி அம்மா
திருவொற்றியேஸ்வரர் நமக

எழுதியவர் : காவேரி நாதன் (8-Dec-25, 12:22 pm)
சேர்த்தது : KAVERINATHAN
பார்வை : 10

மேலே