அண்ணாமலையாருக்கு அரோகரா

அண்ணாமலையாருக்கு அரோகரா
உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா

அண்ணாமலையாரே
அக்னி நாதனே
அடியார் மனதில்
அனலாய் ஒளிரும்
ஜோதி சுடரே

உன்னை அண்டிய அனைவரின்
வாழ்வில் ஒளிரும்
அணையா சுடரே

எங்கும் நீ இருக்க
எல்லா பொழுதும் நீ இருக்க

திரு கார்த்திகை அன்று
தீப ஒளி திருநாள் என்று
மழையின் மீது
திருவண்ணாமலையின் மீது
பரணி தீபமாய்

இந்த தரணியின்
அறியாமை
அகம்காரம்
ஆசை
ஆணவம்
இச்சை
ஈனம்
உறவு
ஊனம்
எதிர்பார்ப்பு
ஏமாற்றம்
ஐயம்
ஒழுக்கமின்மை
ஓதாமை
பொறாமை
பலி
பாவம்

என்னும் அனைத்தும் எரித்து
ஒளியாய் நீயே உண்மை
என விலக்கும்
ஜோதி

பரணி ஜோதியே
பஞ்ச பூத தலைவனே

அண்ணாமலையனே
திருவண்ணாமலையனே

உன்னை கண்டு
பரவசம் கொண்டு
காண வந்த அனைவரின்
மனதில்
நீயே நின்று

பேதம் இல்லா பெரும்சுடரே
பாலினம் பாகுபாடு இன்றி
நாதியற்று அறுபட்டு
உள்ள அனைவரையும்
அணைத்த அர்த்தநாதீஸ்வரா

அனைத்தும் நீயே
ஒற்றை சுடரே
ஓங்கி
நீண்டு
ஒளிர்விடும்
சுடரே
ஒளியே
தீபமே
அருளே
நெருப்பே
ஜோதியே
அனலே
தனலே
விளக்கே
வெளிச்சமே

பரணி தீபமே

மகிழ்கிறேன்
உன்னால்

ரசிக்கிறேன்
உன்னை

அணையா சுடரே

அனைத்தையும் எரித்து
உன்னுடன் என்னை
நிறுத்து

எல்லாம் வெறுத்து
நீயே ஒளி
பேரொளி

பரவச நிலையில்
திருவண்ணாமலையில்

திரு ஒளி கண்டு
தீப திருநாள் இன்று

அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி

அர்த்தநாதீஸ்வரருக்கு அரோகரா
அருணாச்சலேஸ்வரருக்கு அரோகரா
திருவண்ணாமலைக்கு அரோகரா
உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா
அண்ணாமலையாருக்கு அரோகரா
அண்ணாமலையாருக்கு அரோகரா

ஓம் நமசிவாய

எழுதியவர் : (8-Dec-25, 12:24 pm)
சேர்த்தது : KAVERINATHAN
பார்வை : 11

மேலே