உன்னை துதிக்கிறேன்
ஓம் நமசிவாய
உன்னை துதிக்கிறேன்
உன் நாமம் கூறுகிறேன்
உன் அருளால்
உன் தாழ் வணங்குகிறேன்
எல்லாம் மறந்து
உன்னையே நினைய
என்றும் உன்னை துதிக்க
எப்படி துன்பம் என்னை தீண்டும்
நின்மதியில் நீ இருக்க
நிம்மதி எங்கே போகும்
ஆடல் அரசே நீ இருக்கையில்
அலப்பறை எதற்கு எனக்கு
பெருமை வேண்டேன்
புகழ் வேண்டேன்
உன்னை என்றும் துதிக்க
என்றும் உன்னை வணங்க
உன்னை வேண்டி
எப்பொழுதும் அப்பா
உன்னையே அழைப்பதற்கு
சிவபுராணம்
என்றும் நாவில் இருந்திட
அதை கூறி மகிழ்ந்திட
உன் பொற் பாதம் வணங்கிட
அருளிடு இறைவா
கண்ணேறு
கண்ணே
முக்கண்ணனே
உன்னை வணங்கையில்
அஞ்சுதல் எதற்கு
ஐந்து முகத்தானே
எதுவாகினும்
நீ இருக்கிறாய்
உன்னை நம்பி
உன்னை வணங்கி
உன் பொற் பாதம் பணிந்து
எல்லாம் நீயே
எல்லாம் நீ பார்த்துப்பாயே
அர்த்தநாதீஸ்வரா
நாதி அற்றவர்களின்
நண்பனே
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

