மல்லிப்பூ இட்லி உன்கையால் அல்லிநீ தந்தால் இன்னிசை நேரிசை வெண்பா
மல்லிப்பூ இட்லி மணக்கும் சுவைச்சாம்பார்
முல்லைவெண் சட்டினி மெல்லிய உன்கையால்
அல்லிநீ தந்தால் அதுபோலோர் ஆனந்தம்
இல்லையடி இங்கே எனக்கு
மல்லிப்பூ இட்லி மணக்கும் சுவைச்சாம்பார்
முல்லைவெண் சட்டினி மென்கையால் -- மெல்லியலாள்
அல்லிநீ தந்தால் அதுபோலோர் ஆனந்தம்
இல்லையடி இங்கே எனக்கு

