கோடிட்ட இடங்கள்---ஹைக்கூ கவிதை
நம் வாழ்க்கையின் சில தருணங்களை..
கோடிட்ட இடங்களாய் விட்டு வைக்கிறோம்..
விதி இனிமையான தருணங்களாய்
மாற்றி அமைக்கும் என்ற நம்பிக்கையில்!
2.சில உண்மைகள்..
கோடிட்ட இடங்களாய் மறைந்து விடுகிறது
நம் வாழ்க்கையில்..
நம் கண்களுக்கு புலப்படாமல் இறுதிவரை!

