பேலா பஜாரி
அடியே குஞ்சிதம்....
@@@@@
என்னடி ரஞ்சிதம்?
@@@@@
உம் மவன் அவம் பேத்திக்கு என்ன
பேருடி வச்சிருக்கிறான்.
@@@@@
அதைப் பத்திச் சொல்ல என்னடி
இருக்குது. சென்னை தெரு குழயாடிச்
சண்டையில் சில பெண்கள் கடும்
கோபத்தில் திட்டும் போது
பயன்படுத்தற இழிவான சொல்லைத்
தன் பெண் குழந்தைக்கு பேரா
வச்சிருக்கிறானாம். அமெரிக்காவில்
வாழறவன். அவன் எந்தப் பேரை வச்சா
நமக்கென்ன? இங்க நம்ம ஊருக்கு
இனிமேல் வரமேட்டன்னு
சொல்லிட்டான். அங்கயே நல்லபடியா
இருந்தாச் சரி.
@@@@@@@@@
அதெல்லாம் கெடக்கட்டும். உம்
மவனோட பேத்தி பேரு என்னடி?
@@@@@@@@@
அழகிப் போட்டில செயிச்ச குஜராத்
வம்சாவளி வழிப் பொண்ணோட பேரு
'பேலா பஜாரியா'வாம். அந்த 'பஜாரியா'
எம் பேரனோட அமெரிக்க மனைவிக்குப்
பிடிச்சுப் போச்சாம்.
@@@@@@@
அப்பறம்?
@@@@@
அப்பறம் என்ன? அவுங்க பொண்ணுக்கு
'பஜாரி'ன்னு பேரு வச்சுட்டாங்களாம்.
அந்த பொண்ணு வளர்ந்து தன்னோட
பூர்வீக ஊரைப் பார்க்க வந்து
சென்னையிலே தங்கினா என்ன ஆகும்.
@@@@@@
உம். அது வர்ற காலத்துக்கு நாம
இருக்கமாட்டோம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இன்று Times of India
நாளிதழில் பார்த்த பெயர் ' Bela Bajariya'

