கிருத்திக் பாலா

நவம்பர் 13, 2025
குரு பகவானுக்கு உகந்த வியாழன்
அன்று வந்துதித்த பேரன்..

அவன் பெயர் கிருத்திக்
பால சுப்பிரமணியன்
அழகிய வசீகரன்...

இன்று 14 டிசம்பர் 2025 ஞாயிறு

கிருத்திக் பாலசுப்பிரமணியன்
இன்று உனக்கு பெயர்
சூட்டும் வைபோகம்
வாழ்த்தட்டும் இந்த வையகம்..

இனி இந்த உலகம் உனதானது
இனி வரும் நூறாண்டு காலம்
இனிதானது புதுமையானது
இதுவரை யாரும் காணாதது..

கல்வி செல்வம் வீரம்
ஆகியவற்றில் சிறந்து
விளங்கி வாழ்வாங்கு வாழ
தாத்தாவின் வாழ்த்துக்கள்..

கிருத்திக் பாலசுப்பிரமணியன்
யாரையும் நீ ஜெயித்து வாழ
வேண்டும் என்பதில்லை உன்னை
நீயே ஜெயித்துக் கொண்டிரு..

சரித்திரத்தில் இடம் பிடித்து
வாழ வேண்டும் என்பது
இல்லை உன்னை உனக்குப்
பிடிக்க வாழ்ந்திரு...

தாத்தாக்கள் ஆச்சிகள்
பாலசுப்பிரமணியன் கற்பகவல்லி
மாரிமுத்து கார்த்திகேஸ்வரி
ஆகியோரின் ஆசிகளில்
உனக்கு வெல்வதற்கு
இந்த ஒரு உலகம் போதாது..

தாய் சுபாஷினி வெண்ணிலா
தந்தை கற்பக ராஜா
ஆகியோரின் இளவரசன்
கிருத்திக் பாலசுப்பிரமணியன்..

உன்னால் இன்றிலிருந்து
இந்த உலகத்தின் மதிப்பு கூடியது
எங்கள் எல்லோருடைய
மனங்களும் மகிழ்ந்தது...

வானம் வசமாக
வசந்தங்கள் வரமாக
உன் பெயர் சூட்டும் இந்நாளில்
இனிய வாழ்த்துகள்...

அன்புடன்...
தாத்தா ஆர் சுந்தரராஜன்
ஆச்சி சாந்தி சுந்தரராஜன்.
🌹😍❤️

எழுதியவர் : இரா. சுந்தரராஜன் (15-Dec-25, 11:16 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 20

மேலே