சங்கரா 15-டிசம்பர்-2025

சங்கர சுப்பிரமணியன்...
அன்று நீ தொழில் நுட்பக்
கல்லூரி ஒன்றின் கதிரவன்...
இன்று உற்றார் உறவினர்
நட்பு உலகின் சந்திரன்..

நீ வழிகாட்டிய மாணவச்
செல்வம்.. வசந்தங்களின்
பாதைகளில் பயணிக்கும்..
உலகம் அதனால் ஒளிரும்..
இந்த உணர்வில் உந்தன்
உள்ளம் என்றும் குளிரும்..

தேர்ந்த இசைக் கலைஞன்..
அவனது நேர்த்தியான
நெளிவு சுளிவுகளில்
இசைக்கருவிகள் இன்பம் தரும்..

தொழில் நுட்பக் கல்வியில்
இதனை இப்படி செய்ய
வேண்டும் என்பதில் நீ
காட்டும் நேக்குப் போக்குகள்
இந்தியாவின் திராவிட மாடல்
உலகத்தின் இந்திய மாடல்..

அன்பில் நிலா அறிவில் சூரியன்
நண்பன் சங்கர சுப்பிரமணியன்
வசந்த வாழ்த்துகள்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துகள்...
🌹❤️😍👍🪷🤝

எழுதியவர் : இரா. சுந்தரராஜன் (15-Dec-25, 11:21 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 25

மேலே