காதல், பைனான்ஸ் கம்பெனியல்ல
சேதாரம் சொல்லெடுத்து
அவதாரமிட்டவர்களே..
அன்புக்கு விலைவைத்து
பண்பினை உலையிலிட்டவர்களே..
காதல் வியாபாரமல்ல
லாபமென்றும், ந்ஷ்டமென்றும்..
உடலாக உள்ளவையை
உட்கொள்ள உரமிட்டு
ஊமையாக ஜாடையிட்டு
ஊரெல்லாம் ஊளையிட்டு
ஊனமாகிப் போனவர்களே
காதல் வியாபாரமல்ல
விரயமாகிப் போவதற்கு..
நடை பிணமானவர்களே
உயிரோடு உள்ளமட்டும்
உள்ளத்தால் ஊனமாகி
ஊர்வசியாய், ரம்பையாய்
ஊர்கோலம் போனவர்களே
காதல் வியாபாரமல்ல
உயிரற்ற பண்டமாய் விற்பதற்கு..
முதலிட்டு தொழில் தொடங்க
மனங்கள் என்ன கல்லா - இல்லை
கல்லாமல் கவிபாட
கற்பனை வெள்ளோட்டமோ
ஈரமற்ற இதயத்துடன்
ஆதாயம் தேடும் அற்பர்களே
காதல், பைனான்ஸ் கம்பெனியல்ல...