விளையாட்டு

நான்
வெண்ணிலா பிடித்து
விளையாடிய
வீட்டின் முற்றத்தில்
இன்றும் நிலவு
கிணற்றில் விழுந்து கிடக்கிறது.

தண்ணீரில்லாத
அக்கிணற்றில் தத்தளிப்பது
எனது தனிமையும்
உள்வீட்டினது
எனது
குழந்தைகளின்
கணிபொறி விளையாட்டுகளும்.

எழுதியவர் : அ.இராஜ்திலக் (28-Oct-11, 10:01 am)
Tanglish : vilaiyaattu
பார்வை : 291

மேலே