அழகுச் சிலை பெண் குழந்தை
அழுக்கு இருட்டு...
ஆரவார உறவு
அன்பிழந்த
அடங்காபிடாரி
அன்னை
அறுத்து எறிந்தாள்
அழகுச் சிலை பெண் குழந்தை
அய்யோ பாவம்
அழுகின்றது
அரசுத் தொட்டில்....!
காற்று வந்து தாலாட்டுது...
கண்ணீரிலே
பாவம் பாசப் பசி....!
சொல்லத் தெரியவில்லை
இன்னும் அழுகைச் சத்தம்...!
அச்சச்சோ அச்சச்சோ
அடிப் பாவி உன் இதயம்
அறுபட வேண்டுமடி...!