"பெத்த மனம் பூக்கட= பிள்ளை மனம் சாக்கட"


அவ கஞ்ச குடிச்சிபுட்டு
உனக்கு கறிசோறு போடுவா,
காய்ச்சல் தலைவலின்னா
உன்ன கூட்டிட்டு ஆசுபத்திரிக்கு
தலைதெறிக்க ஓடுவா.....

அவ கந்த துணியுடுத்தி
உனக்கு கதராட போட்டாளே,
அழுகுர உன்ன தூக்கிவெச்சு
தூங்கவெப்பா பாட்டாலே...

பசியில அவ இருந்தும்
உனக்கு பால தானே ஊட்டுனா,
ஒட்டுமொத்த பாசத்தெல்லாம்
உன்மேல காட்டுனா.....

படிக்காம அவ இருந்தும்
உன்ன பண்பாக பாத்திருந்தா,
வெளியபோன நீ வரும்வர
உண்ணாம காத்திருந்தா,

விருந்தினருக்கு அறை கொடுத்தான்
ஆறுமாடி வீட்டுக்குள்ள
ஆளுயர மாடியில அர அடி தாயிக்கில்ல...

மண்தரையில அவ இருந்தும்
மடியில உன்ன படுக்கவெச்சா
மனமில்லா புள்ள உனக்கு
மகராசன்னு பேரு வெச்சா....

பொண்டாட்டி பேச்சை கேட்டு
பொக்கிஷத்த தள்ளிவச்சான்
முதியோர் இல்லத்தில சேத்துபுட்டு
அவள உசுரோட கொல்லிவச்சான்...

முகம் சுருங்கி போனபின்னும்
முழுநிலவா உன்ன பாத்தா....
தாய்ப்பாலுக்கு வெல போகுமாடா
நீ சேர்த்து வெச்ச சொத்த சேத்தா...

கனமாக இருக்காயா கண்காண ஆசிரமத்துல
அவள இறக்கிவிட்டு பறக்கதுடித்தான்
பத்தினி தாய் பெத்தபுள்ள.....

அவன சுமந்த காலமத
சுகமாக நெனச்சுகிட்டா,
விட்டுட்டு போகயில விழி வழியும்
கண்ணீரையும் கைகளால தொடச்சிகிட்டா.....

மலர்ந்த நினைவெல்லாம்
அவளுக்கு மறுத்து பட்டுப்போனது,
அவ பெத்தபுள்ளையோ "அம்மா"
என்ற உறவ அறுத்துவிட்டு போனது....

கல்நெஞ்ச காரன கனிவாக கூப்பிட்டு,
தூக்கி எறிஞ்சவன்கிட்ட தூய்மையோட சொன்னா,

"உடம்ப பாத்துக்கப்பா"

மறுபிறப்பெடுத்து மனமுவந்து
அவன பெத்துபோட்டா
மனித தெய்வங்கள் வாழும் கூட்டில்
(முதியோர் இல்லம்)
அவ மகன நெனச்சு செத்துப்புட்டா.....

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (5-Nov-11, 10:00 pm)
பார்வை : 322

மேலே