"அம்மாவாகிய நான்"


உணவு உண்ட பின்
இரத்தமாகும்....

என் ரத்தமே இன்று எனக்கு
உணவாகிய அதியசம்
என் வயிற்றில் நீ...

முள் குத்தினாலும் முனகி தீர்க்கும்
என் வாய் உன் கால் உதைக்கு
கனிவான மாயமென்னடா....

என் உறக்கத்தை கெடுத்துதாலும்
உறங்காமல் ரசித்தேனடா
உன் உள்ளங்கால் சினுங்களை.....

தாய் என்றால் பெருமையாக
பேசும் நம் நாட்டு மக்களுக்கு
எப்படியடா புரிய வைப்பேன்
எனக்கு அன்னை பட்டமளித்த
ஆண்டவன் நீ என்று.....

தீட்டு என்று தனிமைப்படுத்தி அறைக்குள்
என்னை அனாதையாக்கியது உறவுகள், கண்கலங்கி நான் நிற்கையில் வயிற்றில்
உதைத்து எனக்கு உணர்த்தினாயடா
என் துணைக்கு நீ உண்டு என்பதை...

மயில் போன்ற பாதங்களை
பூமியில் தாங்கி நீண்ட நேரம் கூட
நிற்கவில்லையடா உனக்கு
முதுகு வலிக்குமென்று.....

தலை, தலைக்கீழாக சுற்ற,
கண்கள் அகன்று சுருங்க,
முடிந்தவரைக்கும் மூச்சடக்கி,
கடிந்த குரலில் கத்திதீர்த்து,

இதோ வெறும் அழுக்குகளில்
அடைக்காத்தேன் உன்னை
என் உடலை சுத்தபடுத்தி
சுகமாக்கினாய் என்னை......

மூன்று மணிநேர ஓய்விற்கு பிறகு
முழித்து பார்த்தேனடா முதலில் உன்னை,
உன் முகம் பார்த்த நொடியிலேயே என் முழுவலியும்மூச்சு தெறிக்க ஓடியதடா....

என் கண்ணே....
உன்னை பெற்றதால் நான் தாயானேனாம்
எனக்கு மறுப்பிறப்பு கொடுத்த உன்னை என்னவென்று அழைப்பேனடா
"என் உயிரே" என்பதை தவிர.....

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (24-Nov-11, 9:06 pm)
பார்வை : 335

மேலே