எடை போடாதே

எல்லாம் எடை போட்ட
மனிதா உன்
எண்ணத்தை எடை
போட்டாயா ............?

சொல் ....
விதியோடு விளையாடும்
எண்ணத்தில்
விடையொடு நடமாடும்
சோகத்தை எடை
போட்டாயா ....?

அதில் ....
சுமையாய் கரையும்
கண்ணீரில் கழுவும்
பாவத்தை எடை
போட்டாயா .....?

இல்லையேன்
பின் எதற்கு
எடை போடுகிறாய்
கீழ் ஜாதி மேல் ஜாதி
என்று ....!

மனிதா
மடமையை திறந்து
மகிமையின் உயிரை
பறை சாற்ற
பாரில் யாவரும்
ஒன்றே வாழும்
உயிர்கள் இரண்டே
என வாழப்பழகுங்கள்
நாமும் வளருவோம்
நம் நாடும் வளருமே ....!


எழுதியவர் : hishalee (1-Dec-11, 12:43 pm)
பார்வை : 250

மேலே