Donkey 's walk Ass Kick



மாலை நேரம் மலர்த்தோட்டம்
கவிஞர் ஏதோ கவிதை எழுதிக் கொண்டிருந்தார்
ஒரு மனிதர் அருகில் வந்து அமர்ந்தார்
நீங்க எழுத்துவில் கவிதை போடறவர் தானே
ஆமா
என்ன சார் கவிதை போடறீங்க....கழுதை

கவிதை எழுத் எழுத வரும் போதை
நான் ஏந்தி நிற்கும் மதுக் கிண்ணம்
அந்தக் கவிதை கோப்பையிலிருந்து
அருந்தினால் கொடுக்கும் கிக்

புரிஞ்சுதா சார்

புரிஞ்சுது ஆமா நீங்க கண்ணதாசனுக்கு தாசனா

ஆமா கவிதையின் தாசன்
சரி கவிதையை நீங்க சொன்ன கழுதையின்
கோணத்தில பார்க்கலாமா
If Poetry is Donkey 's Walk then You will get
Ass Kick என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா

இல்லை இப்பத்தான் கேக்கிறேன்

தமிழில் சொல்கிறேன் கேளும்
கிக் உதை கிடைக்கும்
என்ன உதை கழுதை கிக்

இனிமேலும் அமர்திருந்தால் வார்த்தையால்
மட்டுமில்லை கையாலும் காலாலும்
உதை கிடைக்கும் என்று வந்தவர்
வணங்கி வேகமாய் நடை கட்டினார்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Dec-11, 9:11 am)
பார்வை : 619

மேலே