அத்தனையும் புதுமை
அதற்குள் இரவா?
இப்படி சில நாட்கள்...
நேரத்தோடு ஓட முடியாமல்
மூச்சிரைக்கும் வேலைகள்...
இன்னும் மதியம் தான் ஆகிறதா?
இப்படியும் சில நாட்கள்...
நேரத்தை தள்ளிக்கொண்டு
என்ன செய்வதென்று தெரியாமல்...
இருப்பினும்...
ஒவ்வொரு நாளும் புது மலரே
ஒவ்வொரு மூச்சிலும் புது காற்றே
ஒவ்வொரு சிந்தனையும் புதுத் தேடலே
ஒவ்வொரு உறவும் புது நட்பே...