மாயப் பெண்ணின் கண்கள்

கயற்கண் என்று சொன்னால்
கயலதில் கருமை இல்லை
மயிற்கண் என்று சொன்னால்
மயிலதில் வெண்மை இல்லை
பங்கயற் கண்ணி என்றால்
பங்கயம் மறுநாள் கூம்பும்
அங்க யற்கண்ணி என்றால்
கேட்டதே கண்டதில்லை
வாள்விழி என்று சொன்னால்
வணங்குதல் வாளுக்குண்டு
வேல்விழி என்று சொன்னால்
கொல்லலே காதலன்று
நீள்விழி என்று சொன்னால்
மதிமுகம் குறைந்து போகும்
அல்விழி என்று சொன்னால்
சேய்மையில் மென்மை இல்லை
கதிரொளிப் பார்வை என்றால்
வெம்மையே குளிர்வு இல்லை
நிலவொளிப் பார்வை என்றால்
குளிர்மதி குறைந்து போகும்
அம்பென பார்வை சொன்னால்
ஒன்றையே அம்பு கொள்ளும்
வம்புலிப் பார்வை என்றால்
வீரமே காத்தலன்று
மலர்விழி என்று சொன்னால்
மலரது மறுநாள் வாடும்
அலற்விழி என்று சொன்னால்
துயிலயில் தூய்மை இல்லை
மான்விழி என்று சொன்னால்
மருளுதல் அதனிர்கில்லை
விண்மீன் விழிகள் என்றால்
பகலதில் காணல் அரிது
அதனால்
மாயக் கண்கள் என்றே
அந்த
மாயவள் கண்ணைச் சொல்வேன்

இவன்
டாக்டர்.வை .கலைவாணன்

எழுதியவர் : டாக்டர்.வை .கலைவாணன் (18-Dec-11, 9:52 pm)
பார்வை : 381

மேலே