ஊதிப் பெருக்கு

வெற்றிடத்தில்
அழகான மாளிகை
இருப்பதாகச் சொல்

இல்லாத மாளிகைக்கு
சென்று வர
விமானத்தை
ஏற்பாடு செய்

ஊடகங்களில்
ஊதிப் பெருக்கு
வெறுமையை
பெருமையாய் !

கருவாடு விற்ற
பணம் நாறவா போகிறது !
அது பழசு!

பொய்யை விற்று
சேர்க்கும் பணம்
எரிந்தா போகிறது !
இது புதுசு!

அறியாமையை
மூலதனமாக்கு!
கட்டத்தைப் போடு
குறுக்கும் மறுக்காய்!
சனிப் பெய்ர்ச்சி
என்ச் சொல்லி
அள்ளிக் குமி
பணத்தை
பொய்யை விற்று !

எழுதியவர் : (23-Dec-11, 5:34 am)
பார்வை : 253

மேலே