உறவா?தோழியா?காதலியா?

பெண்ணே
உதிர வழி வந்த உறவா?
நான் சுயமாய்
தேர்தெடுத்த தோழியா?
மழலையில் இருந்து
முதுமை வரை
நேசிக்க விரும்பும்
காதலியா?
விடைகான விரும்பவில்லை
எதுவாக இருந்தாலும்
துன்பம் வரும்போது
உன் தோள்களை
பற்றிக்கொள்ள வேண்டும்
இன்பம் வரும்போது
உன் இன்முகம் காண வேண்டும்
தொலை நிலவாய்
இல்லாமல்
தொடும் நிலவாய்
எப்போதும் நெருக்கமாக
நீ வேண்டும்

எழுதியவர் : janany (24-Dec-11, 10:36 pm)
பார்வை : 654

மேலே