பொருட்கழிவு ! (காப்பாற்றுங்கள் நம் பிள்ளைகளை )

ஆசை ஆசையாய்.....
ஆயிரம் பொருட்கள்
வாங்கியோ, பெற்றோ
அன்றாட வாழ்வில்
உடன்கொள்ளாத பொருளுக்கும் - கொல்லும்
"கழிவு" என்றே பொருள்.

பொருட்கழிவை சரிசெய்து
புத்துயிர் கொடுப்போம் பொருளற்றோருக்கு! - மறைமுகமாக
இதுவே சிறந்ததும்
நம் மக்களின் ஆரோக்கியமான நீண்ட நல்வாழ்விற்கும்!!


மிக முக்கியக் குறிப்பு:
இன்றும் 30% இந்திய மக்கள், வாழ்வுக்குத் தேவையான
உண்ண உணவு, உடுத்த உடை, உறங்க இடம் - இவையேதுமின்றி
வீதியிலே உலவுகிறார்கள்
விதியரியா
இல்லை விதிமுடியா விளக்கங்களின்றி????

மறுபுறம்,
சிறிய உதாரணமாக,
அதே இரவில்,
பெற்றோர்களினாலும், கெட்ட பழக்கங்களுடைய நண்பர்களினாலும்
வழிதவறிய
இன்றைய இளைஞர்கள்
"இரவு விருந்து" - என்ற பெயரில்
தனைமறந்து அடிக்கும் கூத்தில்,
உணவின் மேன்மையையரியாதும்,
உடையின் தேவையையரியாதும் - மது அருந்தி
வீடு செல்லாது, வீதியிலே உலவுகிறார்கள்... - வழிமறித்து
ஏனென்றுகேட்டால்
"என் வாழ்க்கை என் கையில்" - எனக்கு
எல்லாம் தெரியுமென்றும் உளறுகிறார்கள்.....


காப்பாற்றுங்கள்
பொருட்கழிவிலிருந்துமட்டுமல்லாது,
மிதமீறிய பொருட்களினால் - திசைமாறிய
நம் பிள்ளைகளையும்.

எழுதியவர் : A பிரேம் குமார் (25-Dec-11, 1:45 pm)
பார்வை : 301

மேலே