அறிவு மேதை அப்துல் கலாம் !

முன்னாள் குடியரசு தலைவர்
மக்கள் மனதில் எந்நாளும் இவர் !

எளிமையான தோற்றம் கொண்ட
இந்தியாவின் விஞ்ஞானி இவர் !

அறிவு சுமை கொண்ட நல்ல
ஆக்க திறன் படைத்த இவர் !

வல்லரசு நாடாக இந்தியா வரும் என்று
வாய் மொழியால் உரைத்த இவர் !

கல்வியில் கரை தேடும் மாணவர்களுக்கு
அறிவு புரண்டு வரும் காவிரி இவர் !

நாட்டின் ஆக்க வளர்சிக்கு நல்ல
கல்விதான் அஸ்திவாரம் என்றார் இவர் !

ஈடில்லா மகிழ்ச்சி இன்றும் ,எங்கும்
மாணவர்களுடன் விவாதிக்கும் இவர் !

வளர்ந்த நாடுகளில் இந்தியாவின் பெருமை பட
பணியில் அன்று வாழ்ந்த சரித்திரம் இவர் !

அப்துல் கலாம் -இவர்
அறிவுக்கு நமது சலாம் !!

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (25-Dec-11, 8:07 pm)
பார்வை : 522

மேலே