திரும்பாத வாழ்க்கை...
வருடங்கள் ஓடிவிட்டது...
வடுக்களும் ஓரளவு மாறிவிட்டது...
ஆனால் இழந்த வாழ்க்கை மட்டும்
திரும்பவில்லை....
அமைதியாய் கடலோரம்
அழகாய் விளையாடிய
குழந்தைகள் மேல் உனக்கேன்
அவ்வளவு கோபம்....
பசியோடும் வலியோடும் போராடும்
மக்கள் உன்னோடு சொல்லவந்தால்
ஏன் இந்த குரூர தாண்டவம்...
உன் மடியே அன்னை மடியென
உன்னால் வாழ்ந்தவர் மேல் உனக்கென்ன
அத்தனை ஆவேசம்...
நீ வந்து சென்ற நாள் முதல்
உறவை இழந்து, உடமை இழந்து,
நிம்மதி இழந்து இன்று அனாதையாய்
நிற்கும் பல அப்பாவிகளுக்கு என்ன
பதில் சொல்ல போகிறாய்...
காலம் கடந்தாலும் கண்முன்னே இன்னும்
நீ ஆடிப்போன கோரதாண்டவம்.....