-----காதலியின் கவிதை----

-----காதலியின் கவிதை----

என் மேனி கரும்பு
உன் பார்வை எறும்பு
ஊறி கொண்டே இருக்கிறது.

உன் குளிர்ந்த பேச்சில்
வாங்கிய காபி
ஆறி கொண்டே இருக்கிறது.

நீ பக்கத்தில் இருந்தால்
என் ஹார்மோன்கள்
வெட்கத்தை மட்டுமே சுரக்கிறது..

நீ ரசிக்க வேண்டுமென
தாவணிகள் மூடி புது புது
முகபாவனைகள் பிறக்கிறது.

செல்லம் - புஜ்ஜி
பூன குட்டி - அழகி
எந்தாயி - உள்ளாயி
இந்த வார்த்தைகளெல்லாம்
உனக்கு எங்கிருந்து கிடைக்கிறது...

பிசாசு - ராட்சசி
எரும - நாயி
கொலகாரி - கள்ளி
இப்படி நீ திட்டும்
வார்த்தைகள்
எப்போதும் இனிக்கிறது.

கவிதையா பேசி பேசி
என் உடம்பெல்லாம் கூசுதுட.

இரவெல்லாம் தூங்கமா
என்மனசு பேசுதட.

தின்ன தின்ன
பசிக்கிறது
காதலன் முத்தம்.

அதை சொல்லமுடியாத
பெண்ணாக பிறந்தது
குத்தம்.

மின்விளக்குகள் இல்லாத
என் இரவுகளில்
மின்மினி பூச்சிகளை
பறக்கவிட்டவனே!

சொர்க்கத்தில் வைத்து
இந்த ஜோசிய கிளியின்
கூண்டு கதவை
திறந்துவிட்டவனே!

என் முகமெல்லாம் பருக்கள் வெடித்த போதும்
தேடி வந்து
என்னை தேவதை என்று
அழைத்தவனே!

காதல் என்னும்
கருப் பைக்குள் எனை வைத்து
காலமெல்லாம்
சுமந்தவனே!

செருப்பு அறுந்தால்
என் பாதம் தரைபட கூடாதென
தூரம் பாராமல்
தூக்கி நடப்பாய்...

மந்திரம் தெரிந்திருந்தால்
எனக்கு சுதந்திரம் வேண்டுமென
சிறகை மாட்டி பறவை
ஆக்கி இருப்பாய்..

எனக்கு காவல் இருப்பதைத் தவிர
உனக்கு வேலை கிடையாதா?

என்னை காதலிப்பதைத் தவிர
உனக்கு வேறு எதுவும் தெரியாதா?

நான் கேட்ட பொருள்ளெல்லாம் கிடைக்கும்
ஒரு சந்தையாக நீ இருந்த..

உள்ளங்கையில் பொத்திவச்சு அடைகாக்கும்
ஒரு தந்தையாக நீ இருந்த...

என் மடியில் படுக்க
உன் உதடுகளிலிருந்து
ஆயிரம் பொய்கள் வந்தது..

படுத்ததும் உண்மைகள் எல்லாம்
கண்ணீராய் கண்களில் வந்தது..

ஏமாற்றியவர்களை நாய் என்றாய்..
என்னை உன் தாய் என்றாய்..

ஒவ்வொரு நொடியும்
என் இதழ்களில்
சிரிப்பை உறுதி செய்தாய்.

இவள் இல்லாமல்
இன்னொரு வாழ்க்கை
இல்லையென இறுதி செய்தாய்.

நீ இருக்கும் வரை
எனை யாரும்
சாகடிக்க முடியாது அன்பே!

நீ இல்லையெனில்
எனை யாரும்
வாழ வைக்க முடியாது என்பேன்....

----தமிழ்தாசன்----

எழுதியவர் : --தமிழ்தாசன்--- (2-Jan-12, 2:08 am)
பார்வை : 809

மேலே