பிரிவு....
அமைதியான நேரம் அழகான
கவிதைக்கான தருணம்...
உள்ள உணர்ச்சியை
உணர்வாக இல்லாமல்
உருவகமாக சொல்லும் பேனா...
உள்ள துடிப்பினை கவிதையாய்
மட்டுமல்ல காகிதமாய் கூட
கூற முடியாத நட்பின் பிரிவை
ஆதங்கத்தை இறக்கி வைக்க
ஒரு மடி வேண்டும் உலகின்
ஏதாவதொரு மூலையில்...