"நான்காம் வகுப்பு மாணவர்கள் உணவு உண்ணும் நேரத்தில்"

===========================
உணவு உண்ணும் நேரத்தில்
ஓர் உன்னத அனுபவம்..........
===========================

"அண்ணாச்சி" கடை அரிசி,
"நாடார்" கடை எண்ணெய்,
"பிள்ளைவாழ்" கடை காய்கறிகள்,
இவை அனைத்தையும் கொண்டு
சமைத்த சாதத்துடன்,

"ஐயர்" வீட்டு தயிர் சாதம்
"தேவர்" மெஸ் பிரியாணி,
"நாயர்" கடை டீ யுடன்

"முதலியார்" கடையில்
வாங்கிய சீருடை அணிந்துகொண்டும்

செட்டியார் வீட்டு திண்ணையில்
அமர்ந்து கொண்டும்....

"கோனார்" நோட்ஸ் இல் பாடம் படித்து
கொண்டே அனைத்தையும்
பிரித்து மேய்ந்து கொண்டும்....

பணக்காரன் மகனும்,
பண்ணைக்காரன் மகனும்,
செவ்வோலை வீட்டு செல்வியும்,
சேர்ந்து கோடிகளை பற்றி
கூடி பேசவில்லை,

விடுமுறை நாளின் பிரிவை எண்ணி
பரிவுடன் பேசுகின்றனர்....,

{டேய் "ஆண்டனி" உங்களை எல்லாம் பிரிஞ்சி எப்படி இருக்க போறேன்னு தெரியலடா,
அது முடியவும் முடியாது டா, அதனால "இப்ராஹிம்" ம கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வாடா
நாம தெனமும் எங்க அப்பா அம்மா தம்பிகூட
விளையாடலாம். ம்ம் சரி "மகாலட்சுமி"}

-----------------------------------------------------------------------
இவர்கள் அத்தனை ஜாதி கடைகளில்
வாங்கி செய்த உணவை உண்டனர்,
உண்டபின் ஜாதிகளையும் கை கழுவினார்கள்.....

இது நம்மில் எத்தனை பேரால் செய்ய முடியும்.....

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (9-Jan-12, 9:04 pm)
பார்வை : 416

மேலே