ஹிஷாலீ - ஹைக்கூ - 1 to 115


1 கடலோர சிலைகளுக்கு
கைதட்டும் மாலைகள்
விளம்பரப்படமாய் குப்பைதொட்டியில்


2 பாயும் வாகனத்தில்
தூய காற்றும் துயரப்படுகிறது
கண்ணுள்ள மனிதனால்


3 சிலைக்கு ஒளிகாட்டும் மனிதன்
மனச்சிறைக்கு வழிகாட்ட
லஞ்சம் வாங்குகிறான்


4 பல கோடி கண்களுக்கு
பகலாய் மின்னும் ஓரு கோடி
வெண்ணிலா தியாக சுடறாய்

5 எண்ணங்கள் ஆயிரம்
வண்ணங்கள் நூறாயிரம்
முடிவில்லா ஆசை ....!

6 ஆவிகளின் கண்ணீர்
தேநீராக பிறக்கிறது
மழை துளி.....!

7 நெடுநாள் பொறுமை
கெடு நாள் ஆத்திரம்
ஒரே நொடியில் கெட்ட பேர்.

8 கழிப்பிடமும் இருப்பிடமும் காசு
அறிவை சுத்தம் செய்தது
தனியார் பள்ளி ...!

9 முதுமை
வழுக்கையில் தெரிகிறது
செழுமை ....!

10 மனதை விட அதிகமாய்
வலித்தது மானம்
இதயமற்ற பெண்களால் .....!

11 ஐம்பது ரூபாய் குண்டு
தோற்றது அகிம்சை
வாய்மையே வெல்லும்

12 ஏறுவரிசையில் வருடம்
இறங்குவரிசையில் இதயம்
365 1/4 முடிகிறது

13 காணமுடியா இசையில் கூட
கருணை மறைந்திருக்கிறது
காற்றின் அசைவில் .....!

14 மழையில் பிரசவம்
ஒரே செல் காளான்
மனிதனுக்கு நல் மருந்து.

15 ABCD யில் இதயம்
இந்தியாவில் நல் உதயம்
வளராத தமிழர்கள்

16 அடிக்கும் இமைகள்
இடியே இல்லாமல்
பொழிகிறது மழை

17 தினமும் ஒரு முறை
பிறக்கும் இறக்கும்
முடிவில்லா எண்ணிக்கை.

18 சுற்றுவதும் தெரியவில்லை
சுமப்பதும் புரியவில்லை
களைப்பில்லா பூமி ..........!

19 ஆறில் விதைத்தது
அறுபதில் அறுவடை
முடியாத வரவும் செலவும்..

20 கட்டுமான பொருட்களுக்கு
கட்டுக் கட்டாய் நோட்டுகள்
விலை தராசில் கல்வி .....!

21 எண்ணற்ற தொகுதிகள்
ஏலம் போகிறது
பொது உடமையில் தனி உடமை

22 ஏறுவரிசையில் கல்வி
இறங்குவரிசையில் அரசு வேலை
வாயிதாவில் மறு பதிவு



23 மனத்தால் வரையாத ஓவியம்
உனதால் வரைகிறேன் என்
கருவறையில் ....!

24 எழுதாத வாசகம்
எழுதுகிறது மண்ணில்
கண் தானம் ....!

25 குடி குடியை கெடுக்கும்
நன்மையில்லா சமுதாயச் சீர்கேடு
குடி பணம் நாட்டை வளர்க்கும்

26 காதலை சொல்லும் ரோஜாக்கள்
கண்ணீர் சிந்தியது
வாடிய இதழில் வைரங்கள்

27 குடைக்காக ஏங்கும் மழை
பொழிந்தும் நனையவில்லை
கைபிடி இல்லா கார் மேகம்‌

28 குனியாத புருவமும்
கொடுக்காத கைகளும்
நல்ல வாழ்ந்ததா சரித்திரமில்லை

29 சிலைக்கு ஒளிகாட்டும் மனிதன்
மனச்சிறைக்கு வழிகாட்ட
லஞ்சம் வாங்குகிறான்

30 பாயும் வாகனத்தில்
தூய காற்றும் துயரப்படுகிறது
கண்ணுள்ள மனிதனால்

31 மா கோலங்கள்
மண்ணுயிருக்கும் உணவாய்
மனிதாபிமானம்‌ ........!

32 சுட்ட நிலவில் கூட
வடை சுடும் பாட்டி
தீயில்லாமல் பொய்மையிலும் நன்மை

33 பழகிய உயிர் பாரமில்லை
பயணத்தில் நசுங்கியது
ஆறைவிட ஐந்திற்கு பரிதாபம்

34 நரம்பு தெரியா எறும்புகள்
கடித்ததும் வலிக்கிறது
சிறு துரும்பும் ஆயுதமாய்

35 கடலோர சிலைகளுக்கு
கைதட்டும் மாலைகள்
விளம்பரப்படமாய் குப்பைதொட்டியில்

36 பல கோடி கண்களுக்கு
பகலாய் மின்னும்
ஓரு கோடி வெண்ணிலா .

37 பதினைந்து நாடுகள் ஒற்றுமை
பண்டமாற்று முறையில் .....
கைக்குள் அடக்கம்!

38 இரவு பகல் கடந்தாலும்
உறங்கவில்லை
இதயம் ............

39 அழிவதில்லை காதல்
காதலர்கள் அழிந்துவிடுகிறார்கள்
மாற்றுத் திறனாளியில் இதயம்

40 உதிரத்தில் ஓட்டா உறவுகள்
சரிரத்தில் ஒட்டுகிறது
இரத்த தானம் ...!

41 அயல் நாடும்
அடைக்கலம் ஊழலில் ....
மனிதனில் குரங்கு!

42 நாட்டை வளர்த்தாலும்
சமுதாய சீர்கேடில்...........
குடியைக் கெடுக்கும் குடிப்பணம் !

43 அசையும் நாற்காலியில்
அசையா சொத்துக்களின் பதவிப்பிரமாணம்
ஐந்தாண்டு திட்டம்

44 மாற்றான் தோட்டத்து கல்வி
தாயின் கருவறை பாடமாய்
ஆங்கில மோகம்!

45 நொடியில் மரணம்
தூண்டிலிட்டவனுக்கு உணவாய்
தீமையிலும் நன்மை

46 அசிங்கத்தின் அடிமையாய் படிக்கட்டில்
அடைகாக்கும் மிதியடிகள்
ஏற்றத்தாழ்வில்லா பண்பு

47 மண்ணிற்கு உரமாகும் மீன்விழி
மற்றொரு உயிருக்கு பூவிழியாய்
கண் தானம்

48 முட்டாள் மாணவனையும்
விருது படைக்கும் துருப்பு சீட்டு
குருவணக்கம்

49 ஆர்பரிக்கும் உயிருக்கு
அடைக்கல உயிர் ஓவியம்
இரத்த தானம்

50 பல வண்ணங்கள்
சேர்ந்து பேசும் ஓவியம்
ஒருமைப்பாடு

51 பகலின் முடிவாய் விழித்திருக்கும்
நிலாவெள்ளி
தியாகத்தின் திருப்புமுனை

52 பொதி சுமந்த கழுதை
சலவை கருவியில் சங்கம்
ஒற்றுமையிலும் வேற்றுமை

53 உதிரத்தின் சீற்றம்
விதி முடிக்கா உயிரின் ஜெனனம்
இரத்த தானம்

54 ஜெனிக்கும் இதயத்தில்
கணிக்கும் மருந்தாய்
இரத்த தானம்

55 விரலின் மாற்றத்தில்
விசித்திர அழகிகளாய்
அறுவடை நகங்கள் ......

56 பிறக்கிறேன் இறக்கிறேன்
இருந்தும் புன்னகை பூவாய்
சிரிக்கிறேன் முள்ளைகண்டு

57 சுரக்கும் மாதங்கள் பத்தானாலும்
பிறக்கும் பால் .......
அமிர்தமாகும் அன்னை மடியில்

58 தொடும் வானமாய்
தொலைகிறேன் நிழலில்லா
கல்லறையில் நிம்மதியை தேடி

59 எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு

60 உயிராய் உரமாய்
உலா வரும் உருவங்கள்
உதிரும் மண்ணிற்கு இரையாகிறது


61 ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை

62 இருளின் இருட்டறையில்
இதயம் உறங்கா
நித்திரையே தூக்கம்


63 களிமண்ணில் கலைநயம்
கற்கும் கைகள் தஞ்சையில்
தலையாட்டு பொம்மை

64 தர்மங்கள் பல செய்தால்
கருமங்கள் மறைந்து
கண்ணீர் சிறக்கும்

65 வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி

66 பிரியாத உடலை
பிரித்துக்காட்டும் கலை
மருத்துவம் ...!

67 நிர்வாணமாய்
நீல வண்ணப் பாடத்தில்
உணர்ச்சியுள்ள ஆதம்ஏவாள்

68 நெய் சோறு
வேலைக்காரிக்கு
நாயின் மிச்சம்

69 ஜாதிமதம்
ஒழிப்பு
ரத்த தானம்

70 எண்ணற்ற உயிர்கள்
பூமியில் இளைப்பாறுகிறது
சுமைதாங்கிகள்

71 கடந்த நாட்கள்
இன்றும்
கவிதை...

72 முகப்புகள் கிழிந்தது
குப்பைதொட்டியில்
புத்தகம்

73 கல்லறை தொடா மானிடர்கள்
தஞ்சம் காற்றின் சுவாசத்தில்
கைம்மாறு கருதாதவர்கள்

74 அகிம்சையின் சுதந்திரம்
தபால்தலை வாங்கும் ரூபாய் நோட்டில்
தியாகியின் அடையாளம்

75 அடுக்குமாடி
அழகு பொருள்
திறவா காப்பியங்கள்

76 சுடும் வெந்நீரில்
சுவையான நினைவுகள்
மன்னிப்பு.

77 வரி வாங்க விற்க
வாழ்க்கை வயதில் நிற்க
ஏலம் போகிறது பணம்

78 வஞ்சத்தில் பஞ்சத்தை தேடுகிறான்
பசிக்கும் ருசிக்கும்
திருடியவன்

79 காயிச்சி வடித்தாலும் .
வெகு தூரமில்லை ...
மரணம் !

80 சட்டத்தில் ஓட்டை
இருகரம் இணைகிறது
சாக்கடையுடன் சந்தனம்

81 வெட்கத்தை மறந்து
துக்கத்தில் பசியாற்றுகிறாள்
விலை மாது

82 விலைக்கு குழந்தையானவள்
விரும்பாத தேகத்தில்
விதைக்கிறாள் HIV

83 தமிழில் விதைத்த கல்வி
அறுவடையாகிறது
ஆங்கிலத்தில்

84 சிகரட்டில் இதயம் இறக்கும்
எழுதுகோலில் எண்ணம் பிறக்கும்
இருவிரல் துணையுடன் ....

85 மொழியுமில்லை
இசையுமில்லை
மழலையின் சிரிப்பழுகையில்

86 உண்ட பயிரை அழித்து
உறங்குகிறான் வீட்டில்
விவசாயத்தை மறந்த விஞ்ஞானி


87 யாருக்கும் சொந்தமில்லை
சொந்தத்தை சுற்றுகிறது
ஊர்சுற்றும் வாலிபன்


88 வானம் அழுதால் மழை
பூமி அழுதால் பிழை
கண்ணீரே ஏழையின் நிலை

89 தாய் பாலா கள்ளிப் பாலா
தெரியாமல் முட்டி முட்டி குடிக்கிறது
பெண் சிசு கொலை


90 சிவப்பு வண்ணத்தில்
சிலையலங்காரமாம் செத்தும்
சிரிக்கிறது பட்டுப்பூச்சி....!


91 முதுகெலும்பு
முன்னிருவிரல்கள் நடுவில்
முதல் சுழியே பேனா


92 இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை

93 எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பில்
இதயங்கள் இணைவதே காதல்


94 இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்

95 விதைக்கும் வியர்வையில்
வேரூன்றி வளர்க்கிறாள்
அன்னை

96 பெட்டையும் சட்டைபோட்டாள்
பொன்முகில் கூண்டில்‌
தலைமுறை பெருக்க


97 உதிராமல் உதிரும் சரீரத்தில்
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்

98 வரையாத ஓவியத்தில்
வரையும் நிறம் தான்
மழை

99 விழுந்தால் விதை
விடிந்தால் கனவு
காதல்

100 எண்ணங்கள் தீட்டும்
வண்ண ஆயுதம்
பேனா ...!

101 மதிக்காத பொருளை மிதிக்கும்
உலகில் செருப்பும் சாதிக்கிறது
வெறுப்பில்லா மகளிடம் .

102 அன்று வீட்டுக்குள்
வீடு கட்டிய சிலந்திக்கு
இன்று காட்டில் கூட இடமில்லை

103 சொல்லி கிழிபட்டு
அழுகிறது
கண் ...!

104 முகமும் அகமும் இல்லை
மூன்றாம் விழி!
மூக்குகண்ணாடி

105 கீதை குரான் பைபிள்
மூலப் பொருள்
கடவுள்

106 துயிலை இழந்த மயில்
பசிக்கு விலையாகிறாள்
விலைமாது

107 பிறப்புகள் நூறு
இறப்புகள் பலநூறு
சிலுவை சுமந்தது மலர்கள்

108 இடி மின்னல் பட்டு
கிழியுது வானம்
புண்ணிய தீர்த்தம்

109 தலை பூ
தன்னிகரில்லா
தாயகம்

110 எழுத்தறிவின்மை
குழந்தைத் தொழிலாளர்
மாறிவிட்ட சமுதாயம்

111 கரும் பலகை
கணிணியாக்கம்
மருவிய விழிப்புணர்வு



112 ஏழை பணக்காரர்
இறுதி சொத்து
மண்ணின் மைந்தர்

113 வறுமை வென்றது
வாழ்க்கை கொன்றது
எழுத்தறிவில்

114 விசுவாசம்
விவசாயம் குறைந்துவிட்டது
வீட்டு மனைதிட்டம்

115 புஞ்சை நிலமும் நஞ்சு
பருவ மழை
தவறினால்

எழுதியவர் : hishalee (10-Jan-12, 4:46 pm)
பார்வை : 493

மேலே