பின்னோட்டம்

முட்செடிகள் போலவே
மண்டிக்கிடக்கின்றன
மூட நம்பிக்கைகளும்
கிராமங்கள் தோறும்

அகற்ற வேண்டிய
பத்திரிக்கைகள்
மவுன ஊர்வலத்தில்
போவது போலவே
அமைதி காக்கின்றன

இன்னும் சிலவோ
மண்டிக்கிடக்கும்
முட்கள் மகத்தானவை
எனத் தத்துவம் பேசுகின்றன

அறியாமை அகற்றுங்கள்
என அறிவியல் அறிஞர்
சொன்னால்
அவரே அறியாமையில்
இருக்கிறார் எனப்
பின்னோட்டம்

ஊழலை ஒழிக்க
உண்ணாவிரதம் எளிது!
மூட நம்பிக்கை ஒழிக்க
உண்ணாவிரதம்
இயலுமா? இந்தியாவில்

எழுதியவர் : (11-Jan-12, 2:28 pm)
சேர்த்தது : வா. நேரு
பார்வை : 283

மேலே