***என் அம்மாவுக்காக...***
எத்தனை இரவுகள்
நமக்காக விழித்திருப்பாய்
எத்தனை பகல்கள்
நமக்காக அழுதிருப்பாய்
எத்தனை நாட்கள் நமக்காக வேகாத
வெயிலில் வேலை பார்த்திருப்பாய்
தன்னந்தனியாக நின்று நம்மை
எப்படி வளர்த்தாயோ?
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
அத்தனையும் தாண்டி நம்மை வளர்த்தாய்!
உன் உடம்பை உருக்கி
நமக்காக உழைத்தாய்
உள்ளத்தின் காயங்களை மறைத்தாய்
நமக்காக சந்தோசமாய் இருப்பது போலவும் நீ நடித்தாய்
எம்மை வளர்க்க நீ பட்ட துயரைச் சொல்ல சொல்ல ஆறாது
நித்தம் உன் நினைவு என்னை கலங்க வைக்கிறது
சத்தமின்றி அழுகின்றேன் உன்னை நினைத்து
என்னை ஆற்றிடவும் போற்றிடவும் உன்னைப் போல் யாருமில்லையிங்கு
இனிமேலும் உனக்கு ஈடாய் எதுவும் இருக்கப் போவதில்லை எனக்கு
எதுவரையில் என்னுயிரோ அதுவரையில் உன்னை என் நெஞ்சில் வைத்துப் பூஜிப்பேன்
இன்னொரு ஜனனம் எனக்கிருந்தால் அதில் உன்னை சுமக்க வேண்டுகின்றேன் என் சேயாக ........................!!!!!!!!!!!!
அன்புடன்
உன் அன்பு மகள் saya .....**********