இப்படியே யோசித்துக்கொண்டு

தூரம்
தூக்கம்
துன்பம்
மறந்த
எனது
தேடல்,

வெற்றியை தேடியா?
வெற்றிக்கான
பாதையை தேடியா?

வெற்றி என்பது
நான் செருமிடமா?
என் பயணமா?

பயணம்
தொடங்கிவிட்டதா?
முடங்கிவிட்டதா?

பயணத்தை
தொடங்க முயற்சிப்பதா?
தொடக்கம்தான் முயற்சியா?

முயற்சி வெற்றிக்காகவா?
முயற்சிதான் வெற்றியா?

வெற்றியை தேடவா?
வெற்றியை அடையாவா?

இப்படியே யோசித்துக்கொண்டு!

எழுதியவர் : எழுத தெரியாதவன் (20-Jan-12, 2:09 am)
சேர்த்தது : எழுத தெரியாதவன்
பார்வை : 256

மேலே